Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கடவுளை எதிர்த்தால்...! ராவணனை வணங்கும் பக்தர்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாறி மாறி வருவதில் இது மட்டுமே நிச்சயமானது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
03:09

அரபுநாட்டில் இப்னு அப்பாஸ் (ரலி)என்பவர் வசித்தார். தனது தோழர்களின் செயல்பாட்டில் வெறுப்பு அடைந்த அவர், காட்டிற்கு சென்று விட்டார். நாட்டில் இருக்கும் மக்களை விட, காட்டிலுள்ள மிருகங்களே மேல் என அவற்றுடன் பழகி வந்தார். ஆனால், அங்கு வந்த சில வெள்ளையர்களின் கண்ணில் இவர் படவே, அவர்கள் இவரை சிறைப்படுத்தி யூதர்கள் வசிக்கும்தராபலுஸ் என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கே அகழி வெட்டும் பணியில் இரவுபகலாக ஈடுபடுத்தினர்.முன்பின் அறியாதவர்களிடம் சிக்கி வேதனைப்படுவதை விட, தவறு செய்யும் நண்பர்கள் செய்யும்வேதனையே தேவலாம் என அப்பாஸுக்கு தோன்றியது.இந்நேரத்தில், ஹலபு என்ற ஊரில் இருந்து ஒரு பணக்காரர் வந்தார். அவருக்குஅப்பாஸைத் தெரியும். வெள்ளையர்களிடம் பத்து தினார் பணம் கட்டி, அப்பாஸை விடுவித்தார். தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்று, அந்த உழைப்பாளியை தன் அழகு மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். சிலநாட்கள்மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் தம்பதியர். திடீரென தன் பணக்கார புத்தியைக் காட்டினாள்அந்தப் பெண். எப்போதும் சண்டை. அவள் பேசினாலே, சாட்டையால் அடித்தது போல வார்த்தைகள் வந்தன. குறிப்பாக, நீ என் தந்தையால் பத்து தினார் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட அடிமை தானே! நான்சொல்வதைக் கேள், என்பாள். பணம் கொடுத்து நம்மை மீட்டு வந்ததற்கு பதிலாக, அகழி வேலையிலேயேஇருந்திருக்கலாமோ என நினைத்தார் அப்பாஸ்.இந்த நிகழ்வில் இருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.அதாவது, நமக்கு வரும் கஷ்டங்களை பெரிதாக நினைக்கக்கூடாது. ஒரு கஷ்டத்தில் சிக்கியிருக்கும் போது, இன்னொரு பெரிய கஷ்டம் வந்தால், பழைய கஷ்டம் எளிதாகி விடும். எனவே, எல்லா கஷ்டங்களை யும் எளிமையாய் எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar