வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ராமர் பாதம், சன்னாசி முனியங்கோவில் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. கோடியக்காடு வனப்பகுதி தண்ணீர் குறைவால் தற்சமயம் வறண்டு காணப்படுகிறது. ராமர் பாதம் தரிசனத்துக்காகவும், சுற்றுலா வருவபர்கள் சாலையேராம் நிறுத்திச்செல்லும் டூவீலர்களில் உள்ள பைகளை திறந்து, உணவு பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என குறங்குகள் பார்பவை வழக்கமாக கொண்டுள்ளது. பல நேரங்களில் திறக்க முடியாத போது, இந்த பைகளை கிழித்தும், கடித்தும் வீணடிக்கிறது. உணவு தேடி திரியும் குறங்குகளுக்கு, துறையூர் ஓங்கார குடில் நிர்வாகியான ரெங்கராஜ சுவாமி, மலைப்பகுதியில் வாழும் குரங்குகளுக்கு தினசரி உணவு கொண்டு போய் கொடுக்கின்றனர். அதுபோல கோடியக்காடு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு, அகஸ்தியன் பள்ளி அகஸ்தியர் சன்மார்க்க சங்கம் குடில் அமைப்பைச் சேர்ந்தவர்கள அன்னதானம் செய்கின்றனர் கோடியக்காடு ராமர்பாதம் மற்றும் முனியங்கோவில் ஆகிய இடங்களில் சுமார், 200க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு தினசரி உணவு வழங்கப்படுகிறது. பசியால் உணவுக்கு திரிந்த குரங்கும் ஆர்வமுடன் உணவுகளை உட்கொள்கின்றன.