தங்க சிம்ம வாகனத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2014 03:10
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரன் வதம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நேற்று (3ம் தேதி) ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ‘தங்க சிம்ம வாகனத்தில்’ வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு மகர் நோன்பு திடலுக்கு புறப்படாகி சூரனை வதம் செய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.