கீழக்கரை: கீழக்கரை தட்டார் தெருவில் உள்ள உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், குளங்கள், ஆறுகளில் நீராதாரம் பெருகிட வேண்டியும் விளக்கு பூஜை நடந்தது. புதுப்பட்டி கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் நடத்தினார். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ‘மகிஷாசுரமர்த்தினி’ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆன்மிக சமய சொற்பொழிவு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.