பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிவார சிறப்பு வழிபாடு நடந்தது. அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், காலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகமும், ராமர், லெட்சுமணன், சீதை சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், சவுந்தரவல்லி தாயார் சந்நதியில், பெருமாள் ‘உரல் இழுக்கும் கோலத்தில்’ காட்சியளித்தார். கிழக்குப்பகுதி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தரைப்பாலம் அருகில் உள்ள பஜனை மடத்தில் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. எமனேஸ்வரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில், மூலவர் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க வழிபட்டனர்.