திருவெண்ணெய்நல்லுõர்: திருவெண்ணெய்நல்லுõர் பெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திர பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திருவெண்ணெய்நல்லுõர் அகோபிலமடத்தை சேர்ந்த ஜனகவல்லி சமேத வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் கடந்த 4ம் தேதி திருவோண நட்சத்திர பூஜை நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு தன்வந்தரி அலங்காரமும் செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு கோவிலின் உட்பிரகாரத்தில் உற்சவர் உலா நடந்தது. இரவு 7:30 மணிக்கு கோவிலின் மேல்தளத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு, இரவு 8:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அப்போது பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்வர்ண கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.