சூலுார் : சூலுார் திருவேங்கடநாத பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா பூஜைகள் துவங்கின. தொடர்ந்து யாகசாலை பூஜையும், சுவாமி புறப்பாடும் நடந்தது. மறுநாள் காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானத்தை தொடர்ந்து, மதியம் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. சூலுாரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். இரவு நகர சோதனையும், அம்பு சேர்வையும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு பரி வேட்டை, தெப்போற்சவம் நடந்தது. நேற்று வசந்த உற்சவம் நடந்தது.