ராஜபாளையம் :வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு, ராஜபாளையத்தில் சிறப்பு ஜோதி வழிபாடு நடந்தது. வள்ளலார் அகவல் பாராயணம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை, மன்ற செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் சந்திரன், ராஜா லிங்கம், மவுனகுரு தர்மலிங்க ராஜா செய்து இருந்தனர்.