பதிவு செய்த நாள்
08
அக்
2014
12:10
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், சந்திர கிரகண பரிகார பூஜை இன்று மாலை நடக்கிறது. காரிமங்கலம், அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காலை, 11 மணிக்கு கோவில் சாத்தப்படுகிறது. மாலை, 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, சிறப்பு ஹோமம், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுத்தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வரர் மடம் வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காலை, 11 மணிக்கு கோவில் சாத்தப்படுகிறது. மாலை, 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, சிறப்பு ஹோமம், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
* தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காலை, 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை, 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி, பூரட்டாதி, சித்திரை ஆகிய நட்சத்திரங்களை சேர்ந்த பொதுமக்கள் பரிகார பூஜையில் பங்கேற்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.