கங்காதேவி சிவனது தலையில் தான் இருப்பாள். திருவாரூர் மாவட்டம், தண்டலச்சேரி நீநெறிநாதர். கோயிலில் இவள் நடராஜரின் தூக்கிய இடது பாதத்திற்கு கீழ் இருக்கிறாள். கங்காதேவி, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன் அவளிடம், தன்னை இத்தலத்தில் நீராடி வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி கங்காதேவி இங்கு வந்து, சிவனுக்கு பாதபூஜை செய்து வழிபட்டு, பாவம் நீங்கப்பெற்றாள். இதன் அடிப்படையில் இத்தலத்தில் கங்காதேவி சிவனின் பாதத்திற்கு கீழே இருக்கிறாள். வலது கையில் மலர் வைத்திருக்கிறாள். இங்குள்ள தீர்த்தம் ஓமக தீர்த்தம் (குஷ்ட நோய் போக்கும் தீர்த்தம்) என்று அழைக்கப்படுகிறது.