காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலில் சாந்தி ஹோமம் நடந்தது. சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் ராஜ கோபுரங்களில் வேயப்பட்டிருந்த ஓலைக்கூரை கடந்த 7ம்தேதி தீப்பற்றி எரிந்தது. இதற்கு பரிகாரமாக கோவிலில் ஸ்தானிகம் காளீஸ்வரகுருக்கள் தலைமையில் காலை சாந்திஹோமம், அஸ்த்தரஹோமம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனை நடைபெற்றது, இரு கோபுரங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. சிவகங்கை தேவஸ்தான பரம்பர அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார், மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஏஎல். ஏஆர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம பொது மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்திருந்தது.