விழுப்புரம்: எரிச்சனாம்பாளை யம் கிராமத்தில் உள்ள கோவிலில் பவுர்ணமி விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த எரிச்சனாம்பாளையம் கிராமத்தில் மன்னர்சுவாமி, பச்சைவாழியம்மன், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. இரவு 8 மணிக்கு அபிஷேகமும், 9 மணிக்கு அலங்காரம் மற்றும் தீபாரதனை, அன்னதான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 11 மணிக்கு சுவாமி பவுர்ணமி ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.