சிவகங்கை ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2014 02:10
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மஹோத்ஸ்வத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது. திருப்பத்தூர் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயிலில் நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் காலை 6 மணிக்கு திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து 7.30 மணியிலிருந்து 1.30 வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிவரையிலும் லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் லட்சார்ச்சனையில் பங்கு கொண்டனர். இரவு 8 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தி நிகழ்வாக திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.