பதிவு செய்த நாள்
11
அக்
2014
02:10
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ஸ்ரீஅடைக்கலம் காத்த அய்யனார், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ரோஜாலின்சுமதா தலைமையில் நடைபெற்றது.இக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழா காலங்களிலும் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும்,பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.இந்நிலையில் கோயில் அலுவலர்கள்,மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர். இதில் ரூ.9லட்சத்து 96ஆயிரத்து 235 ரொக்கமும், 142.700 கிராம் தங்கமும், 188.300 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.கோயில் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, அறங்காவலர் குழுத் தலைவர் ராஜாங்கம், உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், செல்லம், சுரேஷ், சுதா உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.