பதிவு செய்த நாள்
13
அக்
2014
10:10
புதுச்சேரி; மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி அடுத்துள்ள மொரட்டாண்டியில் நவக்கிரக ஆலயம் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு, சங்கட ஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.விநாயகருக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் தயிர்,பஞ்சாமிர்தம், இளநீர், பழங்கள், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகிய திரவியங்களால் அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு 1008 கொழுக்கட்டை ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அபிஷேகங்கள், ஆலய நிறுவனர் சிதம்பர குருக்கள், கீதா சங்கர் குருக்கள், சீதாராம் குருக்கள் முன்னிலையில் நடந்தது.