பதிவு செய்த நாள்
13
அக்
2014
12:10
கீழக்கரை : பெரியபட்டணத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது. கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் மவுலீது ஓதப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் பெரியபட்டணம் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து குதிரைகள், யானை புடைசூழ வாணவேடிக்கைகள் முழங்க சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்காவை மூன்று முறை வலம் வந்தது. நேற்று இரவு 8 மணிக்கு தர்காவில் இருந்து மீண்டும் பள்ளிவாசலைச் நோக்கி சந்தனக்கூடு சென்றடைந்தது. அக்., 24 கொடியிறக்கம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பெரியபட்டணம் கிராம ஊராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி ஆகியவை செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாகத்தலைவர் சதக்கு, செயலாளர் அபிபுல்லா, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, இணைத்தலைவர் சிராஜுதீன், துணைத்தலைவர் சுல்தான், செய்யது இப்ராம்ஷா, சுல்தானியா சங்கத்தலைவர் சாகுல்ஹமீது, தொழிலதிபர் சிங்கம் பசீர், ஊராட்சிதலைவர் எம்.எஸ்.கபீர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சிவசங்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.