பால்குடம், பறவை காவடி; அ.தி.மு.க., அடுத்த ’ரவுண்ட்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2014 11:10
மதுரை : சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாககோரி மதுரையில் அ.தி.மு.க.,வினர் பால்குடம், பறவை காவடி, தேர் இழுத்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றினர். நேற்று யானைகல்லில் இருந்து 3 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். ராமர் என்பவர் பறவை காவடி எடுத்தார். நாகராஜன் என்பவர் தேர் இழுத்தார். 10 பேர் அலகு குத்தியும் சென்றனர். அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மேயர் ராஜன்செல்லப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் குவிந்ததால் பலருக்கு சில்வர் குடங்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.ஆர்ப்பாட்டம், உண்ணாவிதரம் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் தற்போது ஜெ., விடுதலையாக வேண்டி வேண்டுதல்களில் இறங்கிவிட்டனர்.