திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள், தாயார், ஆண்டாளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராகவன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஸேவா சமிதியினர் செய்திருந்தனர். திண்டிவனம் நல்லியகோடன் நகர் ஸ்ரீ அலர்மேல் ம ங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கு, புரட்டாசி 4 வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் மகா அபிஷேகம் நடந்தது. மூலவர் உற்சவர், ஆஞ்சநேய பெருமான் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை நம்மாழ்வார் சபையினர் செய்திருந்தனர். திண்டிவனம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.