திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த டி.தேவனூரில் ராமானுஜர் ரதஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் துவக்கி வைத்தார். திருக்கோவிலூர் அடுத்த நாயனூர் மலையில் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொது மக்கள் மத்தியில் ராமானுஜரின் கருத்துக்களை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராமானுஜர் ரத ஊர்வலம் நடந்தது. டி.தேவனூரில் இருந்து ரதஊர்வலம் புறப்பட்டது. திருப் பணிக் குழு தலைவர் நாகப்பன் தலைமையில் கிராமத்தை சேர்ந்த பஜனை குழுவினர் ராமானுஜருக்கு பூஜைகள் செய்தனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாநில செயலாளர் ஜெய மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் சரவணன், ஞானசேகர ராமானுஜதாசர், வழக்கறிஞர் கஜபதி கலந்து கொண்டனர். சுற்று வட்டாரத்øதை சேர்ந்த 15 கிராமங்களுக்கு ரதம் ஊர்வலமாக சென்று, ராமானுஜரின் கருத்துக்களை பரப்பும் பணியில் ஈடுபட்டனர்.