பதிவு செய்த நாள்
21
அக்
2014
11:10
திருப்பதி: திருச்சானூரில் உள்ள, பத்மாவதி தாயார் கோவில் திருக்குளம் மூடப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையானின் தர்ம பத்தினியான, திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, கார்த்திகை மாதம், வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 19ம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இதற்கு, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதனால், திருச்சானூரில் உள்ள பத்மசரோவரம் திருக்குளம் மூடப்பட்டுள்ளது. திருக்குளத்தில் உள்ள நீர் முற்றிலும் அகற்றப்பட்டு, கிருமி நாசினிகள் தெளித்து குளம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின், அதில் புதிய நீர் நிரப்பப்படும். அதற்கு பின், பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான பஞ்சமி தீர்த்தத்திற்காக, திருக்குளம் திறந்து விடப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.