துறையூர்: பா.ஜ., சார்பில், துறையூரில் வண்டு சுத்தி விநாயகர் கோவிலில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. துறையூர் பா.ஜ., சார்பில், பெரிய ஏரி கீழ்புறமுள்ள வண்டுசுத்தி விநாயகர் கோவிலை சுற்றியுள்ள புல் மற்றும் முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மனோகர்ராஜன், சம்பத்குமார், சபாபதி, வக்கீல் சுந்தரம், திருநங்கை லாவண்யா உள்பட பா.ஜ.,வினர் பங்கேற்று, கோவில் சுற்றுப்பகுதிகளை சுத்தம் செய்தனர்.