காரைக்கால்: திருநள்ளாரில் வரும் சனிபெயர்ச்சியை முன்னிட்டு நளன்குளத்தை தூய்மை படுத்தி பக்தர்களுக்காக புனித நீர் விடப்பட்டது. காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனிஸ்வர பகவான் சன்னதி உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், வார நாட்களின் சனிகிழமைகளில் பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சி திருவிழா உலக பிரசித்தி பெற்றதாக நடந்து வருகிறது. வரும் டிச.16ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவில் இந்தியாவில் மட்டும் இன்றி உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருநள்ளார் வருவதால். கோவில் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன் நளம் குளத்தை தூய்மைப்படுத்து பணிகளை மேற்கொண்டனர்.மேலும் பணிகளை முடிக்கப்பட்டு நேற்று பக்தர்கள் குளிக்க புனித நீர் விடப்பட்டது.மேலும் வரும் சனிப்பெயர்ச்சிக்காக திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் பணிகளை மேற்படுத்த பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், சாலைகள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள், பஸ் நிறுத்தம், கோவில் புனரமைப்பு, நளன் குளத்தை தூய்மை படுத்தி நளன் குளத்தை சுற்றியுள்ள பெண்கள் உடை மற்றம் அறை, பெருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது.