நோயாளிகளை அவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நலம் விசாரிக்கச் சொல்லும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அவர்களில் ஒரே ஒரு வகையினரை மட்டும் ஒதுக்கச் சொல்கிறார்கள்.அது, மது அருந்துபவர்கள் நோயுற்றால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள்,என்பதாகும்.ஆம்... குடியைநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏதோ, சில காரணங்களால் வரும் நோயால் பாதிக்கப்படுபவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்களை நலம் விசாரிப்பதன் மூலம் அவர்கள் ஆறுதல்அடைவர். ஆனால், குடிகாரர்கள், புகை பிடிப்பவர்கள் தங்களுக்கு நோய் வருமென தெரிந்தே தவறு செய்கிறார்கள். நோய் வரும் என்று தெரிந்தும் ஒரு பானத்தை அருந்துபவனின் முகத்தில் கூட விழிக்கக்கூடாது என்பதே இஸ்லாம் காட்டும் தத்துவம். குடியை விடுங்கள். நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதைச் செய்யுங்கள்.