அஷ்டதிக்கு எனப்படும் எட்டு திசைகளையும் காவல் புரியும் அம்பிகை பராசக்தி பலவித கோலங்களில் அருள்புரிகிறாள். இயற்கை எழில் சூழ்ந்த மலை, காடு, ஆறு போன்ற பகுதிகளில் அவளுக்கு கோயில்கள் அமைந்துள்ளன.மரங்கள் சூழ்ந்த பசுமையான சூழலில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா, காலகம் என்னும் என்னும் கிராமத்தில் ஏழுமுகம் கொண்டு ஏழு முக காளியம்மன் என்ற பெயரில் கோயில் கொண்டிருக்கிறாள். கிழக்கு முகமாக வேப்பமரத்தடியில் வீற்றிருக்கும் இந்த ஏழுமுக காளி, தன்னை நாடி வருவோர் வாழ்வில் ஏற்றம் அளிக்கும் தெய்வமாகவும், நீதியை நிலைநாட்டுபவளாகவும் விளங்குகிறாள். இங்கு வாழ்ந்த நமச்சிவாய சித்தரால் இவள் பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி பாலத்தளி துர்க்கை கோயிலுக்குச் செல்லும் வழியில் காலகம் ஏழுமுக காளி கோயில் உள்ளது. போன்: 94863 17622.