சின்னசேலம்: சின்னசேலம் வாசவி பூங்காவில் உள்ள ராஜகணபதி கோவிலில் நாக சதுர்த்தி, கவுரி பூஜை நடந்தது. ஆர்ய வைசிய சமூக பெண்கள், வனிதா கிளப் உறுப்பினர்கள் இரண்டு கிலோ மஞ்சளில் கவுரியை உருவாக்கி பூஜைகள் செய்து வழிபட்டனர். நாக சதுர்த்தி பூஜையை கணேஷ் சர்மா நடத்தினார். விழா ஏற்பாடுகளை மகிளா சங்க தலைவி வள்ளிக்குமார், வனிதா கிளப் சங்க தலைவி கிரிஜா செய்திருந்தனர்.