பதிவு செய்த நாள்
31
அக்
2014
02:10
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, பிறவிமருந்தீசர் கோவிலில், கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெற்றது. கந்தசஷ்டியை முன்னிட்டு கடந்த, 24ம் தேதி முதல், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை, பொய் சொல்லாப் பிள்ளையார் கோவிலிலிருந்து டாக்டர் ராஜா தலைமையில், பால் குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, 4 மணியளவில், மேலவீதியில் சூரசம்ஹார விழா நடந்தது. நேற்று, முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவையொட்டி, கந்தபுராணம் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் ராஜா, நாடிமுத்து, இளசுமணி மற்றும் அகமுடையர் சங்கத்தினர் செய்தனர். சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் மகாதேவன், பாலு, சோமாஸ்கந்தன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர்.