உங்கள் கண்ணில் தீராதபிரச்னையா! டாக்டரிடம்காட்டி பலனில்லை என்பவர்கள்வயனம் இருத்தல் என்னும் விரதத்தை விருதுநகர் மாவட்டம்இருக்கன்குடி மாரியம்மன்கோயிலில் அனுஷ்டிக்கலாம்.
தல வரலாறு: மதுரைஅருகிலுள்ள சதுரகிரிமலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்பாள் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. சித்தரே! அர்ஜுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா, என்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் சிலையாகப் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது.பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமி பசுஞ்சாணம் சேகரிக்கும் தொழில் செய்தாள். ஒருசமயம் தரையில் வைத்த சாணக்கூடையை துõக்க முடியவில்லை. பெரியோரை அழைத்து வந்தாள். அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன், அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.