Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண் நோய் தீர வயனம் இருங்க! ஆன்மாக்களின் திருநாள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புத்தகங்கள் வெளியிடுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
02:11

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்பை, மக்களாட்சியின் மாண்பை காப்பதற்காக, நபிகளாரின் பேரர் ஹலரத் ஹுசைன்(ரலி) அவர்கள், கர்பலா களத்தில், தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு இந்த மொகரம் பத்தாம் நாளில் தான் அரங்கேறியது.நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பு இருந்தே இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில்மூழ்கடித்து, மூஸா(அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் அல்லாஹ் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இந்த மாதத்திற்கு இருக்கிறது. மொகரம் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களும் நோன்பு நோற்றார்கள். நபிகளாரின் வாக்கின்படி மொகரம் மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்குஅதிகப்படியாக செலவழிக்க வேண்டுமெனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள். இந்தமாதத்தின் பத்தாம் நாளில்,ஹலரத் ஹுசைன்(ரலி)அவர்களின் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்களைக் கொண்ட கூட்டங்களும், புத்தகங்கள் வெளியிடுவதுமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மொகரம் நாளில் பல்வேறு அற்புத நிகழ்வுகள் நடந்துஇருக்கிறது.ஆஷுரா(பத்தாம்) நாளில் தான், நபி இப்ராஹிம்(அலை) அவர்கள், நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பற்றார்கள்.

இப்ராஹிம்(அலை) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு கலீல் எனும் பட்டம் அல்லாஹ்வினால் சூட்டப்பட்டதும் இந்நாளில் தான் நிகழ்ந்தது. ஹலரத் அய்யூப்(அலை) அவர்கள் நோயிலிருந்து குணம் பெற்றதும் இந்த புனித நாளில் தான்! மூஸா(அலை) அவர்கள் மட்டுமல்லாது ஹாருன்(அலை) அவர்களின் இறைஞ்சுதலும் இந்நாளில் தான் ஏற்கப்பட்டது. இதே நாளில் தான் ஈஸா(அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப் பட்டார்கள். உலகின் முதல் மனிதர்கள் எனப்படுகிற ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப் பட்டதும் இந்நாளிலே தான். நுõஹ்(அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரையிறங்கியதும், யூனுõஸ்(அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்தநாளில்தான் நடந்தது. தாவூத்(அலை) அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்கப்பட்டதும், சுலைமான்(அலை) அவர்கள் அரசாங்கம் மீண்டதும் இந்த நாளில் தான். இந்தநாளில் தான் உலகம் முடிவுறும் என நபிகளாரேஅறிவித்து உள்ளது இந்நாளுக்கு உரிய பெரும் சிறப்பாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar