காரமடை ரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழாவின் போது பக்தர்கள் தேரின் மீது வெண்ணெய் வீசி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
ராமநாதபுரம் நயினார் கோயில் உண்டியலில் கோழி முட்டைகளையும் காசுகளையும் போட்டு வழிபடுகின்றனர். கூரிய முட்கள் குத்தாமல் இருக்க வேண்டி முள்காணிக்கையும் செலுத்துகிறார்கள்.
திருப்பெருந்துறை லோகாம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சலை ஆட்டி நேர்ந்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தைப்பேறு கிட்டுகிறதாம்.
கர்நாடகாவில் சுப்ரமணியா எனும் முருகன் தலத்தில் உடலில் கட்டிகள், மருவந்தவர்கள் கண்ணாடிகளை வைத்து பிரார்த்தித்து நிவாரணம் பெறுகின்றனர்.
காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் மாலை 7 மணி முதல் 8.30 வரை 7 அர்ச்சகர்கள் சுற்றிலும் அமர்ந்து வில்வ இலையில் ராமநாமத்தை சந்தனத்தால் எழுதி அர்ச்சனை செய்கின்றனர். இது சப்தரிஷி பூஜை என அழைக்கப்படுகிறது.
திருவெண்காட்டில் அருளும் அகோர மூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.