பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு நேற்று அன்ன அபிஷேகம் நடந்தது. அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் 4:00 மணியளவில் மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றை நாதர் சுவாமிகளுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு கோவிலின் நான்கு மாட வீதிகளை வலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.