பதிவு செய்த நாள்
08
நவ
2014
01:11
நகரி: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சித்துார் மாவட்டம் நகரி அடுத்த டி.ஆர். கண்டிகையில் உள்ள கண்ணொளி வழங்கும் தெய்வம் தேசம்மன் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அதே போல், புக்கை காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், நகரி கரகண்டேஸ்வரர் கோவில், கீளப்பட்டு, சந்திரமவுலீஸ்வரர் கோவில், சத்திரவாடா சிதம்பரேஸ்வரர் கோவில், புத்துார், சதாசிவ ஈஸ்வரர் கோவில், நாராயணவனம் கீழகரம் அகத்தீஸ்வரர் கோவில், புதுப்பேட்டை அகர விநாயகர் கோவில் மற்றும் நகரியை சுற்றியுள்ள அம்மன் கோவில்களில், நேற்று முன்தினம் இரவு, பவுர்ணமியை முன்னிட்டு, விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.