பதிவு செய்த நாள்
17
நவ
2014
01:11
பொள்ளாச்சி : கிணத்துக்கடவை அடுத்த தேவணாம்பாளையம் ஆறுமுகக்கடவுள் கோவில், காலபைரவர் சன்னதியில் காலபைரவாஷ்டமி விழா நடந்தது. இக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஆறுமுகங்கள் கொண்ட முருகன், பழநியில் உள்ளது போல மேற்கு நோக்கி அருள்பாலிப்பது இதன் சிறப்பம்சமாகும். இக்கோவில் அமைந்துள்ள காலபைரவர் கிழக்கு நோக்கி உள்ளார். இச்சன்னதியில் காலபைரவாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு பைரவர் ேஹாமமும், 11.00 மணிக்கு மகா அபிேஷகமும், மதியம் 1.00 மணிக்கு மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள், பைரவருக்கு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கிணத்துக்கடவு : சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிேசஷக பூஜைகள் நடந்தன.சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிேசஷக பூஜை நடந்தது. பின், காலபைரவருக்கு, ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டன. பின், சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகன் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை விளக்கு போன்றவைகளில் விளக்கு வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.