ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பூச்சக்கர குடைகளை கோவை பக்தர்கள் உபயமாக வழங்கினர். கோவைமாவட்டத்தில் இயங்கிவரும் திருமலை பூச் சக்கர குடை பஜனை குழுவினர் 108 திவ்ய தேசங்களுக்கு மழை வளம் வேண்டியும், உலக நன்மைக்காவும் பூச்சக்கர குடைகளை உபயமாக வழங்கி வருகின்றனர். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த அவர்கள் ஒருங்கிணைப்பாளர் மதுரகவி பாக்கியநாத ராமானுஜ தாசன் தலைமையில், நான்கு ரதவீதிகளில் இரு பூச்சக்கர குடையுடன் பஜனை பாடி ஆண்டாள் கோயிலை வந்தடைந்தனர். ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் தக்கார் ரவிச்சந்தரனிடம் அக்குழுவினர் இரு குடைகளையும் வழங்கினர்.