பதிவு செய்த நாள்
17
நவ
2014
05:11
சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்கள்இருமுடியில் வைத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள். முன் முடியில்,
1.தரமான மஞ்சள் பொடி - 100 கிராம்(மலைநடை பகவதி, மஞ்ச மாதாவுக்காக)
2.சந்தனபாக்கெட்
3.குங்கும பாக்கெட்
4.நெய் தேங்காய் -1
5.பசு நெய்
6.விடலைத் தேங்காய் - 5 (எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி ஆழி)
7.சிறிய பன்னீர் பாட்டில்
8.கற்பூர பாக்கெட்
9.பச்சரிசி
பின் முடியில் சமையல் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதுதவிர, அன்றாடத் தேவைக்குரிய பொருட்களான திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்று வேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர், சிறிய கத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரி நுõல், நெய், கம்பளம் அல்லது பெட்ஷீட், டார்ச்லைட், டூத் பேஸ்ட், பிரஷ் ஆகியவற்றை ஒரு ஜோல்னா பையில் வைத்துக் கொள்ளுங்கள்.