பதிவு செய்த நாள்
19
நவ
2014
11:11
பெ.நா.பாளையம் : கோவை மாவட்டம், கணுவாய் அருகே சோமையனுாரில் அமைந்துள்ள ஸ்வாகதம் சாய் மந்திரில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. நேற்று காலை 6.00 மணிக்கு, கணபதி ஹோமம், தொடர்ந்து ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி திரிஸதி ஹோமம், மதியம் கலச அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இன்று புதன்கிழமை காலை கணபதி ஹோமம், மாலை சாயி பஜன் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை ஸ்ரீசர்வபீஷ்ட சாந்தி ஹோமமும் நடக்கிறது.வெள்ளிக்கிழமை சூர்ய, சந்திர ஹோமம், சரஸ்வதி, சந்தரகலா, சூர்யகலா ஹோமங்கள் நடக்கின்றன. சனிக்கிழமை ஸ்ரீப்ரத்யங்கரா ஹோமம், ஸ்ரீமீனாட்சி ஹோமம், மாலை பஜன் சமர்ப்பன் நிகழ்ச்சி நடக்கிறது.ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு சத்யசாய் திருவுருவப் படத்துடன் யானை ஊர்வலம், ரத ஊர்வலம், வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் காலை நேரத்தில் கன்யா பூஜை, சுவாஸினி பூஜை, வடு பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜைகள் நடக்கின்றன.