வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2014 11:11
வால்பாறை : வால்பாறை கோவில்களில் கார்த்திகை முதல் நாளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அணிந்தனர். சபரிமலை ஐயப்பனை விரதம் இருந்து தரிசிக்க, பக்தர்கள் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிகின்றனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு, கார்த்திகை முதல் நாளான நேற்றுமுன்தினம் காலை 5.00 மணிக்கு கணபதி பூஜையும், 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7.00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பின்னர் குருசாமி சுப்புராஜ் தலைமையில் பக்தர்கள் மாலை அணிந்தனர். வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலில் நேற்றுமுன்தினம் காலை 5.00 மணிக்கு கணபதி பூஜையும், 5.30 மணிக்கு அபிேஷக பூஜையும், 6.00 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் மாலை அணிந்து, சுவாமியை வழிபட்டனர். இதே போல் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் அணிந்தனர்.