பதிவு செய்த நாள்
21
நவ
2014
12:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியல்கள், நேற்று, திருவாரூர் உதவி ஆணையர் சிவராம்குமார், தஞ்சாவூர் அரண்மனை ÷ தவஸ்தான உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஞானசேரகரன், ஆய்வாளர் ராஜகோபால் முன்னிலையில் திறக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், தஞ்சை பிரகதீஸ்கவரர் கோவில் மேற்பார்வையாளர் அரவிந்தன், ஆகியோர் பங்கேற்றனர்.பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், சில்லரை காசு, தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு நாணயம் உட்பட பல்வேறு பொருட்களை, மகளிர் குழுக்கள், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட, 60க்கும் மேற்பட்டவர்கள் மூலம் எண்ணப்பட்டது. அதில், 9 லட்சத்து 95 ஆயிரத்து 691 ரொக்கம், 238 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்ஸிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.