பதிவு செய்த நாள்
21
நவ
2014
12:11
வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு, புனித நீர் நிரப்பப்பட்ட, 1,008 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் வரப்பட்டு, ஸ்வாமிக்கு, சங்காபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அர்ச்சனை செய்து வழிபட்டனர். அபிஷேகத்தின் போது, ஸ்வாமி சன்னதியில் தீபவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. இது போல, வேதாரண்யம். நாகை ரஸ்தா காசிவிஸ்வநாதர் கோவில் தோப்புத்துறை கைலாசநாதர் கோவில். கோடியக்காடு குழகர் கோவில், அகஸ்தியம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.