ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2014 11:11
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சங்கு அபிஷேகம் நடந்தது. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு காலை 10:00 மணிக்கு சங்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு சந்த காப்பு அலங்காரத்தில் நாக கன்னியாக அம்மன் அருள் பாலித்தார். அன்ன தான நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.