கோயில்களில் பிறந்த நட்சத்திரத்தில் மரம் நட ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2014 12:11
சபரிமலை: சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பிறந்த நடசத்திர பலன் தரும் மரங்களை நடுவதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெப்சைட்டை அறிமுகம் செய்துள்ளது. பிறந்த நட்சத்திர பலன் தரும் மரங்களை கோயில்களில் நட்டு வளர்ப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு பக்தர்களுக்கு வசதிகள் செய்துள்ளது. www.birthstartree.org என்ற வெப்சைட்டுக்குள் சென்றால் எந்த நட்சத்திரத்துக்கு எந்த மரங்கள் நடலாம் என்ற விபரங்கள் உள்ளது. தங்களுக்குரிய மரத்தை தேர்வு செய்த பின்னர் எந்த கோயிலில் அதை நட வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைனில் பணம் செலுத்த தனலெட்சுமி பேங்குடன் இணைந்து வசதி செய்யப்பட்டுள்ளது.