பதிவு செய்த நாள்
01
டிச
2014
02:12
திருப்பூர் : ""பலவீனமான குரலில் பக்தர்கள் இறைவனிடம் வேண்டுவதையும், காது கொடுத்து கேட்கும் சபத சயனம் என்ற அற்புத திருக்கோலத்தில், திருப்பூரில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளியுள்ளார், என, சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார். பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்றி ரவு சொற்பொழிவு நடந்தது; நாகை முகுந்தன் பேசியதாவது:ஒரு முறை கும்பாபிஷேகத்தை காண்பது, 12 ஆண்டுகளுக்கு பலனளிக்கும். கம்பராமாயணத்தில் 10,348 பாடல்கள் இருந்தாலும், "அண்ணலும் நோக் கினாள்; அவளும் நோக்கினாள் என்ற சிறப்பு பெற்ற பாடல், வீரராகவப் பெருமாளால் உருவானது. அத்திருநாமத்தில் திருவள்ளூரில் எழுந்தருளியுள்ளார். அவரே, மதுரை, திருக்கண்ணபுரம் மற்றும் திருப்பூரில் எழுந்தருளியுள்ளார்.ஸ்ரீரங்கத்தில் புஜங்க சயனமாகவும், திருப்புல்லாணியில் தர்ப்ப சயனமாகவும், கும்பகோணத்தில் ஆரா அமுதன் என்கின்ற, படுக்கையில் கையை தலைக்கு கொடுத்து, உட்கார்ந்திருப்பது போலவும், படுத்திருப்பது போலவும் உள்ள உத்தான சயனத்தில் எழுந்தருளியுள்ளார்.திருப்பூரில் எழுந்தருளியுள்ள பெருமாளை பொருத்தவரை, அடியேன் சபத சயனம் என்றே கூறுவேன். ஏன் என்றால், சாலிகோத்ர மகரிஷிக்காக பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்தார். அப்போது, மகரிஷி, பக்தர்களுக்கும் இதே காட்சியை அளிக்க வேண்டும் என்றார். அப்படியே செய்வதாக சபதம் செய்த இறைவன், இங்கு எழுந்தருளியுள்ளார்.சபத சயன கோலத்துக்கு எடுத்துக்காட்டு, தலைக்கு வலது கையை, வலது காதுக்கு கீழே வைத்துள்ளார். பக்தர்களுக்கு இருக்கக் கூடிய குறையை போக்குவேன் என சபதம் எடுத்துள்ளார். பக்தர் கள் பலகீனமான குரலில் இறைவனிடம் வேண்டுவதையும், காது கொடுத்து கேட்கும் அற்புத திருக்கோலம் இது. எனவே, இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை வணங்குவதால், பக்தர்களுக்கு வாழ்வு வளம் பெறும்; வேண்டியது வேண்டியவாறு கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராஜகோபால மனவாளமுனி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.