பதிவு செய்த நாள்
01
டிச
2014 
02:12
 
 செங்கல்பட்டு: திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் சுவாமிக்கு பதினொரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்ச மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. சிங்கபெருமாள்கோவில் அடுத்த, திருக்கச்சூர் கிராமத்தில் அந்தகாரநிவாரணி (என்கிற) இருள் நீக்கிய அம்பாள் உடனான மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், மருந்தீஸ்வரர் சுவாமிக்கு, பதினொரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்சம் மாலைகளாக அணிவித்து சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம். அதேபோல், நேற்று காலை 8:00 மணிக்கு, மருந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9:00 மணிக்கு, பதினொரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்சம் மாலைகளாக அணிவித்து, சிறப்பு பூஜை, அலங்காரம், வேதபாராயணம் நடந்தது. சிறப்பு பூஜையில், கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.