விழுப்புரம்: விழுப்புரம் பாலமுருகன் சுவாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை தீபத்தையொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு பாலமுருகன் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னார் 8:30 மணிக்கு தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு முருகன் வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் செந்தில் செய்திருந்தார்.