செஞ்சி: செஞ்சி தாலுகா காரியமங்கலம் கருணா சாயிபாபா கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு சென்னை லஷ்மிபதி சாஸ்திரிகள் தலைமையில் மகா கணபதி ஹோமம், 10.30 மணிக்கு மகா சங்கல்பம் மற்றும் சனி பகவானுக்கு 108 திரவிய ஹோமம் நடந்தது. பரிகார ராசிதாரருக்கு பரிகார பூஜையும், மதியம் அன்னதானமும் நடந்தது. முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. உபயதாரர் பச்சைவண்ணன், செல்வாம்பாள் மற்றும் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. பூஜைகளை அருட் பெருஞ் ஜோதி குருக்கள் செய்தார்.