கரூர்: சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்துள்ள, பசுபதிபாளையம், லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் குழுவினர், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, ராமானூர் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் வழிபாட்டு மன்ற வளாகத்தில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, ஐயப்ப பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பசுபதிபாளையம், காந்திநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.