பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
11:06
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, ஆறாண்டுகளுக்கு பின், புதுப்பொலிவுடன் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.இக்கோவிலின் வைகாசி வசந்தோற்சவ விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.இங்குள்ள, 400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கலைச் சிற்பத்துடன் கூடிய தேர், பழுதடைந்து இருந்தது. இதனால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தேரை பிரித்தெடுத்து, புதிதாக நான்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. சுவாமி தேர் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேர்கள், கோவில் முன்பிருந்து புறப்பட்டு, பின்னர் நிலையை அடைந்தன.