பதிவு செய்த நாள்
24
டிச
2014
11:12
வேலாயுதம்பாளையம் : கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில், அனுமந் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. வேலாயுதம்பாளையம் ஐயப்பன் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு, சந்தனக்காப்பு அலங்காரம், வெற்றிலை மாலையுடன் சிறப்பு ஆராதனை நடந்தது. பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர், வெண்ணை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இரவு, 7.30 மணிக்கு வடமாலை, வெற்றிலை மாலை அணிவித்தும் சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
* சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து, கனி வகைகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* காகிதபுரம் வல்லபை கணபதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்து, கனி வகைகளாலும், வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
* லாலாபேட்டை, கொடிக்கால் தெருவிலுள்ள அனுமன் கோவிலில், அனுமந் ஜெயந்தி விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் யூனியன், லாலாபேட்டை கொடிக்கால் தெருவிலுள்ள பழமையான பிரசித்தி பெற்ற ஹனுமன் கோவிலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், பழரசம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வடைமாலை, வெற்றிலை மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை செய்யப்பட்டது. லாலாபேட்டை முக்கிய வீதிகளான கொடிக்கால் தெரு, கரூர்-திருச்சி மெயின் ரோடு வழியாக அனுமன், சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா வந்தது.