பதிவு செய்த நாள்
26
டிச
2014
02:12
கோவை: கோவையில் ஸ்ரீமடம் ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், ஆறு நாட்களாக மேற்கொண்ட விஜயயாத்திரை, நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சியோடு, நிறைவடைந்தது. ஆதிசங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது, ஸ்ரீ ஆதிசங்கராச்சார்ய சாரதாலட்சுமி பீடம்; கர்நாடகத்திலுள்ள ஹரிஹரபுரத்தில், துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் 25வது பீடாதிபதி சங்கராச் சாரிய ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள். கோவையில், டிச., 22 முதல் தர்மபிரசார விஜயயாத்திரை மேற்கொண்டார். தர்மபிரசாரத்தின் கடைசி நாளான நேற்று சாய்பாபாகாலனி, நாராயணகுருரோட்டிலுள்ள சக்திதாம் மந்திருக்கு விஜயம் செய்தார். காலை 7.30க்கு சந்திரமவுலீஸ்வரர், ஸ்ரீசக்கரபூஜையும், காலை 9.30 மணிக்கு சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் தந்து, ஆசிவழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பக்தர்களுக்கு, தீர்த்தப்பிர சாதமும், மந்திராட்சதையையும் வழங் கினார். நேற்று மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ சக்ரநவாவர்ணபூஜை நடந்தது. சுவாமிக்கு பிக்ஷாவந்தனம் சமர்பிக்க நேற்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்களிடம் பிக்ஷாவந்தனம் பெற்றுக் கொண்ட சுவாமிகள், பக்தர்களுக்கு தீர்த் தப்பிரசாதம் வழங்கி, ஆசி வழங்கினார்.