புதுச்சேரி: லாஸ்பேட்டை, திரவுபதி அம்மன் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திரவுபதி அம்மன் கோவிலில், வரும் 1ம் தேதியன்று, மாலை 6:30 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. கடலுார் கோபி பாகவதர் பங்கேற்று, பாண்டுரங்க லீலை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். இத்தகவலை, கோவில் அறங்காவலர் குழு செயலாளர் செல்வகணபதி தெரிவித்துள்ளார்.