Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) 65/100 துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 65/100 தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 65/100
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) 60 /100
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:46

வழியிருந்தால் கடுகுக்குள்ளே கடலைக் காணலாம்!

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

கடந்த ஆண்டு குருவால் உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும்.  கேதுவால் முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டு இருக்கும். பொருள் நஷ்டம், உடல் ஆரோக்கிய குறைவு வந்திருக்கலாம். சனிபகவானால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ராகு மட்டும் நல்ல பொருளாதாரத்தை தந்திருப்பார். கடந்த மாதமே நிலைமை மாறத் தொடங்கி இருக்கும். உங்கள் ராசிக்கு குரு 9-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள்.

இப்போது சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். இது ஏழரைச்சனி காலம். ஏழரைச் சனி என்றாலே நமக்கும்கஷ்டம் தான் வருமோ என்று நினைக்கத் தேவையில்லை. உலகத்தில், நல்லது கெட்டது என்பது கலந்து தான் வரும். பொதுவாக, சனி ராசியில் இருக்கும் போது, உடல் உபாதைகள் வரலாம், வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளே கடலைக் காணலாம் என்பார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் படகு அமைதியாகச் செல்லும்.ஏனெனில், சனியின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். அதாவது, நீங்கள் குடும்பத்தைப் பிரிந்தாலும் கூட, அது தொழில் காரணமாக இருக்கலாம். தொழில் என்று வந்து விட்டால், எந்த ஊரானாலும் போய் தானே தீர வேண்டும்! இது உலகம் முழுமைக்கும் பொதுவான விஷயம் தானே! திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று நமக்காகத்தானே முன்னோர் சொல்லி வைத்திருக்கின்றனர். எனவே, எதையும் எளிமையாக ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.நிழல் கிரகமான ராகு தற்போது ராகு 11-ம் இடமான கன்னியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போதுமீனத்தில் இருக்கிறார். அவரால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம்.இந்த கிரக நிலைகளின் அடிப்படையில், ஆண்டு முழுமைக்குமான விரிவான பலனை காணலாம்.

ராகு, குருவின் பலத்தால் உங்கள் ஆற்றல் மேம்படும். தடைகள் அனைத்தும் அகலும். தேவைகள் பூர்த்தியாகும். பண வரவு இருக்கும். உங்கள் செல்வாக்குஅந்தஸ்து மேம்படும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். ஆனால், ஜூலை 6ல் குருபகவான் சாதகமற்ற நிலைக்கு வருகிறார். இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.குடும்பம்ஜூன் வரை வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதத்திற்கு பிறகு நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் மாறும். ஜூன் மாதத்திற்கு பிறகு கணவன்-மனைவி இடையே அவ்வப்போது பிரச்னை வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகைளில் விரோதம் ஏற்படலாம். அவர்களிடம் அதிக நெருக்க வேண்டாம்.

தொழில், வியாபாரம்வீண் அலைச்சல் இனி இருக்காது. சென்ற இடமெல்லாம் வெற்றி ஏற்படும். புதிய தொழில் தொடங்க பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளம் காணலாம். போட்டியாளர்களின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். 12-6-2015 முதல் 5-9-2015 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மை தான் கிடைக்கும்.அனுகூலமான போக்கு காணப்படும். பணியாளர்கள் ஆண்டு தொடக்கத்தில் வேலையில் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர். ஜூலை 6ல் குரு இடமாறுவதால் வேலைப்பளு அதிகரிக்கும். இதை பொறுமையாகத் தாங்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு உழைத்தாலும், வேலைக்கு மேல் வேலை தருகிறார்களே என்று சலித்துக் கொள்ளக்கூடாது. மேல் அதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் அனுசரித்து போக வேண்டும். எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப் போகலாம். இடமாற்றம் ஏற்படலாம். ஆனால் இந்த இடர்பாடுகள் நீண்ட நாட்கள் இருக்காது. குறிப்பிட்ட காலத்தில் எதிர்பார்ப்பது நடந்து விடும்.

கலைஞர்கள்ஆண்டின் தொடக்கத்தில் பாராட்டு, விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சமூகத்தில் ஒரு அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.

அரசியல்வாதிகள்நல்ல வசதியுடன் காணப்படுவர். நவம்பர், டிசம்பர் மாதத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அரசியல்எதிரிகள் வளர்வர். அவர்களைக் கட்டுப்படுத்த மிகவும் பொறுமையுடன் கடமையைச் செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் வைத்தகோரிக்கைகள் கடும் முயற்சியின் பேரிலேயே நிறைவேறும்.

மாணவர்கள்இந்த கல்வி ஆண்டு ஆசிரியர்களின் அறிவுரையைப் பயன்படுத்துவது நன்மை தருவதாக இருக்கும். கிரகங்கள் தங்கள் பாதையைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, கடமையை எப்படித் தவறாது செய்து சுழல்கின்றனவோ, அப்படியே மாணவர்களும் மனதைக் கட்டுப்படுத்தி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி விட்டால், படிப்பில் எந்த தடங்கலும் வராது. படிப்பில் மட்டுமின்றி பிற வகை போட்டி, பந்தயங்களிலும் வெற்றி பெறலாம். அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டி வரும். விரும்பிய பாடம் கிடைக்க தீவிர முயற்சி
எடுக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் கவனமாக இருப்பவர்களுக்கு, படிப்பில் எந்தவித சலனமும் வராது. கையில் கவனமுடன்  இருக்கவும்.

விவசாயிகள்நல்ல லாபம் உண்டு. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூல் பெறலாம்.ஏப்ரல், மே மாதங்களில் புதிய சொத்து வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கால்நடை செல்வம்
பெருகும். மே மாதத்துக்கு பிறகு நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். நவம்பர், டிசம்பரில் நிலம் தொடர்பான வழக்குகள் சாதகமான தீர்வுக்கு வரும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்

பெண்கள்கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் எடுத்த செயல்கள் வெற்றி
அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  நடைபெறலாம். வேலை பார்க்கும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு  அதிகரிக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். பிள்ளைகள் நலனிலும் அக்கறை தேவை.

பரிகாரப் பாடல்: வேதநுõல் பிராயம் நுõறுமனிசர்தாம் புகுவர் ஏலும்பாதியும் உறங்கிப் போகும்நின்றதில் பதினை யாண்டுபேதை பாலகன் அதாகும்பிணிபசி மூப்புத் துன்பம்ஆதலால் பிறவி வேண்டேன்அரங்கமா நகருளானே!

பரிகாரம்: கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ரங்கநாதரையும், துர்க்கை அம்மனையும் வணங்கி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாட்களில் முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும். ஜூலை 6க்கு பிறகு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு இயன்ற அளவில் உதவுங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.